ஜாலியாக பார்ட்டி பண்ணும் விஜய்சேதுபதியும் அவரது மகனும் - வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களுக்கு பிறகு இயக்குநர் அருண் குமார் - விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் 'சிந்துபாத்'. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Vijay Sethupathi and Yuvan's Sindhubaath's Rockstar Robber Glimpse

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க, விவேக் பிரசன்னா, லிங்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து ராக்ஸ்டார் ராபர் என்கிற முதல் வீடியோ சாங் மே 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் விஜய் சேதுபதியும் அவரது மகனும்  பார்ட்டி பண்ணுவது போல் இடம் பெற்றுள்ளது.