www.garudabazaar.com

VIDEO - தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டில் மாஸாக நடந்து வரும் வீடியோ... செம வைரலாகும் காட்சி...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீங்கள் ஒரு உண்மையான தளபதி ரசிகர் என்றால் டிசம்பர் 2020 ஐ மறக்க முடியாது, ஆம் அன்று தான்  தளபதி விஜய் முதல் முறையாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பு, ஒரு மரண மாஸ் வீடியோவுடன் வந்தது.

vijay in chennai airport thalapathy 65 தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டில்

கடந்த மாதம் DOP மனோஜ் பரமஹம்சா தான் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார். மேலும் அவர் கூறும்போது, தளபதி 65 ஒரு பான்-இந்தியன் படமாக இருக்கும் என்று கூறினார். இதனையடுத்து விஜய்யின் லுக் டெஸ்ட் சன் ஸ்டுடியோவில் பிப்ரவரி 27-ம் தேதி நடந்தது.  தளபதி விஜய் நடிக்கும் 65வது படத்தில் அவருக்கு ஜோடியாக புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே  நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்திருந்தனர். இந்நிலையில் முதன்முறையாக இணையும் இந்த் காம்போ நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிக்கப்போகும் 65-வது படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக துவங்கியுள்ளது. நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன்  மற்றும் பட குழுவினர் ஜார்ஜியா ஷூட்டிங்கில் எடுத்து கொண்ட அழகிய புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தற்போது தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டில் வந்து இறங்கும் மாஸ் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

VIDEO - தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டில் மாஸாக நடந்து வரும் வீடியோ... செம வைரலாகும் காட்சி...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay in chennai airport thalapathy 65 தளபதி விஜய் சென்னை ஏர்போர்ட்டில்

People looking for online information on Thalapathy 65, Vijay will find this news story useful.