போல்டான வேடங்களால் பாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வித்யா பாலன், தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அமிதாப் பச்சன் நடித்த 'பிங்க்' படத்தின் அதிகார்ப்பூர்வ ரீமேக்கான இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். யுவன் இசையமைக்கும் இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனையடுத்து வித்யா பாலன் நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சகுந்தலா தேவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் அதே பெயருடைய நபரின் வாழ்க்கை வரலாறு என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை அனு மேனன் இயக்க, விக்ரம் மல்ஹோத்ரா தயாரி்க்கவிருக்கிறாராம். ஹியூமன் கம்ப்யூட்டர் என அழைக்கப்படும் சகுந்தலா தேவியின் வாழ்க்கையை தழுவி உருவாதாக கூறப்படுகிறது. இவர் 1982 ஆம் ஆண்டு கின்னஸ் ரெக்கார்டில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது.