தளபதியின் 'பிகில்' பட ஸ்டைல் Memeக்கு ஸ்டேஜில் வெற்றிமாறன் - தனுஷ் ரியாக்ஷன் !
முகப்பு > சினிமா செய்திகள்வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்தில் தனுஷின் மகனாக, பிரபல நடிகர் கருணாஸின் மகன் கென் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் அவருக்கு அண்மையில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் Find Of The year விருது வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய அவர், படத்துல எல்லோர் கிட்ட இருந்து செம அடி வாங்குணேன். அது கிளைமேக்ஸ்ல அடி வெளுத்துட்டாங்க. வெற்றிமாறன் சார் தான் என்ன காப்பாத்துனாரு என்றார். பின்னர் அவருடை அம்மா கிரேஸ் உடன் இணைந்து நடனமாடினார்.
அப்போது அவருக்கு பிகிலில் ராயப்பன் சொல்வது போல, எனக்கு சண்டைலா போட தெரியாது, ஆனா உருட்டுற உருண்ட வெறித்தனமா வெடிக்கும் என்ற Meme போடப்பட்டது. அதனை வெற்றிமாறன். தனுஷ் சிரித்து பார்க்கின்றனர்.
தளபதியின் 'பிகில்' பட ஸ்டைல் MEMEக்கு ஸ்டேஜில் வெற்றிமாறன் - தனுஷ் ரியாக்ஷன் ! வீடியோ