பாஜக-வில் இணைந்தார் பிரபல நடிகர் ராதாரவி
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 30, 2019 01:22 PM
பிரபல திரைப்பட நடிகர் ராதாரவி தேசிய கட்சியான பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
![Veteran Actor Radharavi joins BJP today in Chennai Veteran Actor Radharavi joins BJP today in Chennai](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/veteran-actor-radharavi-joins-bjp-today-in-chennai-photos-pictures-stills.jpg)
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற வந்த பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை இன்று (நவ.30) நேரில் சந்தித்த நடிகர் ராதாரவி, பாஜக கட்சியினர் முன்னிலையில் தன்னை பாஜக-வில் இணைத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக திமுகவில் இருந்து நடிகர் ராதாரவி தற்காலிகமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, திமுகவில் இருந்து விலகிய அவர், அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், மீண்டும் அதிமுகவில் இருந்து விலகி தேசிய கட்சியான பாஜகவில் நடிகர் ராதாரவி தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
Tags : Radha Ravi, BJP