வெறித்தனம்! - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் பாடிய 'பிகில்' பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

Verithanam Song is out from Thalapathy Vijay and Nayanthara's Bigil

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெறித்தனம் என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடலின் புரோமோ நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் செம வைரலானது. இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது

வெறித்தனம்! - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய் பாடிய 'பிகில்' பாடல் இதோ வீடியோ