வெங்கட் பிரபுவின் இந்த அரசியல் படம் குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பாக தயாரித்துள்ள படம் 'ஆர்கே நகர்'. இந்த படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, சரவண ராஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Venkat Prabhu's RK Nagar is planning to release in June 7

இந்த படம் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதுகுறித்து வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தேர்தல் என்பதால் அந்த படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அப்போது கூறப்பட்டது.

தற்போது இந்த படத்தின் ரிஸீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் வருகிற ஜூன் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரவைில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.