RRR Others USA
www.garudabazaar.com

திடீரென்று வீட்டுக்கு வந்த JP… மாட்டுவாரா அசோக் செல்வன்? – வைரல் மன்மத லீலை sneak peek

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மன்மத லீலை படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

venkat prabhu Manmatha leelai movie sneak peek video viral

வெங்கட்பிரபுவின் மன்மதலீலை….

மாநாடு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட்  மற்றும் ஜெயப்பிரகாஷ்  உள்ளிட்ட பலர் நடிக்கும் மன்மத லீலை திரைப்படம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன. இளைஞர்களை முழுக்க முழுக்க கவரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இருக்கும் ஆனா இருக்காது…

இந்த படம் பற்றி இயக்குனர் வெங்கட்பிரபு ‘கொரோனா காலத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என நினைத்த போது என் உதவியாளர் மணிவண்ணனின் இந்தக் கதை வந்தது. அருமையான கதை. அசோக்கை சந்தித்து இந்தக் கதை சொன்னேன் உடனே செய்யலாம் என்றார். இப்படம் கில்மா படம் கிடையாது. எனக்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் அப்படி படம் எடுக்க மாட்டேன். இந்தப் படம் கண்டிப்பாக அனைவரும் இணைந்து ரசிக்கும் படியான படமாக இருக்கும் உங்களுக்கு பிடிக்கும். இப்படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி’ என ரசிகர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.

venkat prabhu Manmatha leelai movie sneak peek video viral

போஸ்டர், டீசர், டிரைலர்…

ஏற்கனவே இந்த படத்தின்  போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. அதுபோலவே படத்தின் முதல் சிங்கிள் பாடலான வா கணக்கு பாக்காம என்ற பாடலும் தற்போது வெளியாகி நல்ல கவனத்தை பெற்று வருகிறது. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.  ரசிகர்களை திரையரங்குக்கு வர வழைக்கும் காரணிகளாக இதுவரையிலான ப்ரமோஷன்கள் இருந்து வருகின்றன.

venkat prabhu Manmatha leelai movie sneak peek video viral

Sneak peek…

இந்நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. மீட்டிங் செல்வதாக சொல்லிவிட்டு சென்ற JP திடீரென வீட்டுக்கு திரும்பிவிடுகிறார். ஆனால் அவரின் வீட்டில் அசோக் செல்வன் இருப்பதை மறைக்க சம்யுக்தா ஹெக்டே படும் பாட்டை ஜாலியாக இந்த ஸ்னீக் பீக் காட்சியில் சொல்லியுள்ளனர். இந்த ஸ்னீக் பீக் காட்சி இப்போது இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படத்திலும் இது போல ஜாலியான ஒரு காட்சி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

venkat prabhu Manmatha leelai movie sneak peek video viral

People looking for online information on Ashok Selvan, Manmatha Leelai, Premgi Amaren, Samyuktha Hegde will find this news story useful.