இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்தின் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ்குமார். பின்னர் பிரபல நடிகராக உருவெடுத்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ஜெயில் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்த படம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் வசந்தபாலன், 'ஜெயில்' படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை இன்றிரவு இப்போது தான் முடிந்தது. ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது.
என் இசையின் மொழி, ஜிவிக்கு நன்றாக புரியும். இப்போது கிளைமேக்ஸ் காட்சியை பார்க்கும் போது மிக உயர்ந்த இடத்தில் இருந்தது. மனதால் ஜீவியை இறுக அணைத்துக்கொண்டேன். இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது. கால தேவன் துணையிருக்கட்டும். இசை இருபுறங்களிலும் மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கிது. 'ஜெயில்; தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.