தளபதி விஜய்யின் பிகில் படத்தில் அந்த 11வது பிளேயர் யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 24, 2019 10:50 AM
'தெறி', 'மெர்சல்' படங்களுக்கு பிறகு அட்லி - தளபதி விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தில் தளபதி விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். மேலும் ஏஞ்சல் என்ற பெயர் கொண்ட நயன்தாரா இந்த படத்தில் பிஸியோதெரபிஸ்ட் மாணவியாக நடிக்கிறாராம்.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாஷா திரிப்பதி பாடிய சிங்கப் பெண்ணே என்ற பாடல் நேற்று யூடியூபில் வெளியாகி இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
இந்த பாடல் குறித்து வெளியான அறிவிப்பு போஸ்டரில் தளபதி விஜய்யுடன் 10 பிளேயர் தான் இடம் பெற்றிருந்தனர். அந்த 11 ஆவது பிளேயர் யார் என்று சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் 'வெற்றிவேல்', '96' உள்ளிட்ட படங்களில் நடித்த வர்ஷா பொல்லம்மா தனது ட்விட்டர் பக்கத்தில் 'சிங்கப்பெண்ணே' பாடலில் அவர் வரும் காட்சியை ஸ்கீரன் ஷாட் எடுத்து பகிர்ந்து, நான் தான் 11th பிளேயர் என்று வெளியிட்டுள்ளார்.
Yes, that’s me 😄🎀
11th player #Singappenney #bigil
Blessed. pic.twitter.com/0EoQQcP0Zb
— Varsha Bollamma (@VarshaBollamma) July 23, 2019