'Sakshi-ய உள்ள கொண்டு வந்துட்டு நீ போ' - கவினிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இந்த வாரர்ததுக்கான எலிமினேஷனுக்காக போட்டியாளர்கள் ஓபன் நாமினேஷன் செய்தனர். முதல் புரோமோவில் கவின் சேரனையும் ஷெரினையும் நாமினேட் செய்தார்.

Vanitha, Losliya, Kavin, Kamal Haasan Bigg Boss 3 Promo 3 Sept 1

சேரனை பார்த்து, 'நீங்கள் ஏற்கனவே நேஷனல் அவார்டு உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளீர்கள் என்று கூறி சேரனை நாமினேட் செய்தார். பின்னர் ஷெரினை நாமினேட் செய்தார். அதற்கு வனிதா கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

அடுத்த புரோமோவில் சாண்டி, 'கவினை இப்படி காண்பதற்கு கஷ்டமாக இருக்கு. நீ வெளியே போய்டுடா' என்று கவினை நாமினேட் செய்தார். இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், வனிதா கவினிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''மக்கள் உன்ன இவ்ளோ காப்பாத்திருக்காங்கள ? உனக்கு பதிலா சாக்ஷியை காப்பாத்திருந்தார்கள் என்றால் அவர் ஃபைனல் போயிருப்பா. அதுக்கு என்ன பதில் சொல்ல போற? நீ சாக்ஷியை உள்ள கொண்டு வந்துட்டு வெளியே போ. இது சிம்பத்திக்கான ஸ்டேஜ் கிடையாது'' என்கிறார்.

'SAKSHI-ய உள்ள கொண்டு வந்துட்டு நீ போ' - கவினிடம் கடுமையாக வாக்குவாதம் செய்யும் வனிதா வீடியோ