www.garudabazaar.com

"ஒரு தல காதல".. தனுஷ் குரலில் 'வா வாத்தி'.. வெளியான Reprise Version.. 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாத்தி படத்தில் இடம்பெற்ற வா வாத்தி பாடலை தனுஷ் பாடிய வெர்ஷன் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Vaathi Dhanush Reprise Version VaaVaathi Song Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மயில்சாமி வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் இப்டி தான் இருக்குமா?".. மனம் குளிர வெச்ச சம்பவம்!!..

தனுஷ் நடித்துள்ள தமிழ் - தெலுங்கு இருமொழி திரைப்படம் 'வாத்தி'. கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கிய இந்த  படம் தெலுங்கில் சார் (Sir) என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் தனுஷூடன் நடிகை சம்யுக்தா மேனன்,சாய் குமார், தணிகெள பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர்ரா ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பேரடி, பிரவீணா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்துக்கு யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய,  எடிட்டராக நவீன் நூலி , இசையமைப்பாளராக G.V.பிரகாஷ் பணிபுரிந்துள்ளனர். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பாளர் லலித் குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி தமிழில் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது. தொடர்ந்து இந்தப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனிடையே, வாத்தி திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 51 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த சூழ்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடலின் தனுஷ் வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. இப்பாடலை தனுஷே எழுதி பாடியுள்ளார். இப்பாடல் உருவாக்கம் பற்றிய காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Also Read | பிரபாஸ் - KGF பிரஷாந்த் நீல் இணையும் 'சலார்'.. செம அப்டேட் கொடுத்த ஸ்ருதிஹாசன்..!

தொடர்புடைய இணைப்புகள்

Vaathi Dhanush Reprise Version VaaVaathi Song Released

People looking for online information on Dhanush, Vaathi, VaaVaathi Song will find this news story useful.