Viruman Logo Top
Kaateri logo top
www.garudabazaar.com

பிரபல மலையாள முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா.. வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான திரைப்படங்கள் நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை திரிஷா.

Trisha Latest Photo from the set of Malayalam film Ram Mohanlal

சிறிய இடைவேளையில், தற்போது அவர் திரைப்படங்களில் நடித்து வந்தாலும், அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைந்திருக்கும்.

அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்துள்ள குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியிலும் பேராவலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்தியில், நடிகை திரிஷா, 'தி ரோடு' என்னும் படத்தில் தமிழில் நடித்து வருகிறார்.

Trisha Latest Photo from the set of Malayalam film Ram Mohanlal

அதேபோல் தற்போது மலையாள நடிகர் சூப்பர்ஸ்டார் மோகன்லால் உடன் ராம் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கான அறிவிப்பு பல மாதம் முன்பே வந்தது. திரிஷ்யம், பாபநாசம் படப்புகழ் ஜிது ஜோசப் இந்த படத்தை இயக்குகிறார்.

 Trisha Latest Photo from the set of Malayalam film Ram Mohanlal

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. டாக்டராக இந்த படத்தில் த்ரிஷா நடிக்கிறார்.

Trisha Latest Photo from the set of Malayalam film Ram Mohanlal

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷா இணைந்துள்ளார். கொச்சியில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. போட்டோகிராபர் பென்னட் வர்கீஸ் உடன் திரிஷா எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Trisha Latest Photo from the set of Malayalam film Ram Mohanlal

People looking for online information on Mohan Lal, Ram, Trisha will find this news story useful.