இயக்குநர் மணிரத்னத்தின் 'வானம் கொட்டட்டும்' பட டைட்டில் லுக் போஸ்டர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கதை எழுதி தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'.  இந்த படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்து வருகின்றனர்.

Title look Poster is out from Maniratnam's Vaanam Kottatum

இந்தப் படத்தை மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.