Annatha Others ua
www.garudabazaar.com

LATEST: தல அஜித்தின் ATBB வேதாளம் தெலுங்கு ரீமேக்..! சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘வேதாளம்’.

this famous actress will act in vedalam telugu remake

2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். தல அஜித் உடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்த்னர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருந்தார். வேதாளம் திரைப்படம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் சுமார் 140 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்தது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தல அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறார்.

this famous actress will act in vedalam telugu remake

ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இந்த படம் “போலா சங்கர்” என பெயரிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவி மற்றும் மெஹர் ரமேஷ் முதன்முறையாக இணைந்துள்ள இந்த மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் நவம்பர் 11ஆம் தேதி காலை 7:45 மணிக்கு படபூஜை நடைபெறுகிறது. இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அண்ணன்-தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து தமன்னா, மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.

this famous actress will act in vedalam telugu remake

கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் சுங்கராவின் ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள். போலா ஷங்கர் 2022 இல் திரையரங்குகளில் வெளியிடப்படும்.

this famous actress will act in vedalam telugu remake

நடிகர்கள்: சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா

தொழில்நுட்பக் குழு:

இயக்குனர்: மெஹர் ரமேஷ்

தயாரிப்பாளர்: ராமபிரம்மம் சுங்கரா

பேனர்: ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ்

இசை: மஹதி ஸ்வர சாகர்

தொடர்புடைய இணைப்புகள்

this famous actress will act in vedalam telugu remake

People looking for online information on Ajith Kumar, Chiranjeevi, Keerthy Suresh, Tamanna, Vedalam will find this news story useful.