அனபெல் பேய் வீட்டுக்கு வரா..: திகிலூட்டும் ‘தி கான்ஜூரிங்’ சீரிஸின் புதிய டிரைலர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அனபெல் யுனிவர்ஸின் திகில் படங்களின் வரிசையில் மூன்றாவது பாகமாக உருவாகியுள்ள ‘அனபெல் கம்ஸ் ஹோம்’ படத்தின் டிரைலரை வாரனர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

The trailer of Annabelle Comes Home trailer has been released

கேரி டௌபர்மேந்தான் இப்படத்தை இயக்கி உள்ள இப்படத்தின் டிரைலரில் 'தி கான்ஜுரிங்' படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான வாரன் தம்பதிகளைச் சுற்றி இந்தக் கதையும் நடக்கும் என்று தெரிகிறது. அவர்களின் பெண் குழந்தையும், அவளின் பேபி சிட்டர்களையும் அனபெல் பொம்மை குறிவைப்பது போல் படமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2013-ம் ஆண்டு ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான `தி கான்ஜுரிங்' எனும் ஹாரர் படம் ஒரு கல்ட் ஹிட்டாக அமைந்தது. அதன் கதாபாத்திரங்கள் மற்றும் பின், முன் கதைகளை வைத்து 'தி கான்ஜுரிங் 2', 'அனபெல்', 'அனபெல்: கிரியேஷன்', 'தி நன்' போன்ற படங்கள் வெளியாகி அனபெல் ரசிகர்களுக்கு திகிலூட்டும் வந்து விட்டன. ஹாலிவுட் வரலாற்றில் முக்கியமான ஹாரர் ஃப்ரேன்ச்சைஸ்களில் ஒன்றாக இது தற்போது திகழ்ந்து வருகிறது.

இதற்கு முந்தைய பாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அனபெல் பொம்மையை தவறுதலாக திறந்து விடுவதால் மற்ற அனைத்து ஆவிகளையும் திரட்டி 'அனபெல்' எல்லோரையும் பயமுறுத்துகிறது. இப்படம் வரும் ஜூன்.28ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அனபெல் பேய் வீட்டுக்கு வரா..: திகிலூட்டும் ‘தி கான்ஜூரிங்’ சீரிஸின் புதிய டிரைலர் வீடியோ