ஸ்பெயினில் தனுஷூக்கு கிடைத்த வரவேற்புக்கு இயக்குநர் பெருமிதம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் தனுஷ் . 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அவர் வென்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் 'ராஞ்சனா', ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்துள்ளார்.

The Extraordinary Journey Of Fakir director ken praised Dhanush

மேலும் 'தி எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபாகிர்' என்ற பெயரில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளில் உருவான படத்தில் நடித்திருந்தார். நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் கடந்த ஆண்டு மே 18 ஆம் தேதி பிரான்ஸில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் தனது ட்விட்டர் பக்கத்தில், ஸ்பெயின் தனுஷை நேசிக்கிறது. தி எக்ஸ்டிரார்டினரி ஃபாகிர் படத்துக்கு சிறந்த விமர்சனங்கள் கிடைத்து வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.

அதற்கு தனது ட்விட்டப் பக்கம் மூலம் பதிலளித்த தனுஷ், ''நன்றி கென், நீங்கள் இதனை சாத்தியமாக்கியுள்ளீர்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.