மாதரே...!!!! - விஜய்யுடன் ஏ.ஆர்.ரகுமான் கைக்கோர்க்கும் Bigil ‘சிங்கப்பெண்ணே’ Video Song இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 08, 2019 05:05 PM
தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதுடன், பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் இருந்து முதன் முறையாக ரிலீசான சிங்கிள் டிராக் பாடலான ‘சிங்கப்பெண்ணே’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்தில் பெண்களின் வலிமையை போற்றி, பெண்மையை போற்றும் விதமாக உருவான ‘சிங்கப்பெண்ணே’ பாடல் ரிலீசானபோதே மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் வீடியோவில் நடிகர் விஜய்யுடன், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் முதன்முறையாக தோன்றியிருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் அட்லியும் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
மாதரே...!!!! - விஜய்யுடன் ஏ.ஆர்.ரகுமான் கைக்கோர்க்கும் BIGIL ‘சிங்கப்பெண்ணே’ VIDEO SONG இதோ! வீடியோ