பிகில் சத்தம் மட்டுமில்ல வசூலும் வெறித்தனம் ..!- பாக்ஸ் ஆபீஸ் விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்.25ம் தேதி ரிலீசான ‘பிகில்’ திரைப்படம் வசூலில் வெறித்தனம் காட்டி வருகிறது.

Thalapathy Vijays Bigil 4 days collection in Tamilnadu Box Office

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்திற்கு தளபதி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், பிகில் படம் ரிலீசான 3 தினங்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.64.96 கோடி வசூல் செய்துள்ள நிலையில், 4ம் நாளான இன்று ரூ.18.90 கோடி வசூல் செய்துள்ளது. ஆக திரைப்படம் ரிலீசான 4 தினங்களில் ரூ. 83.86 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனிடையே தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முறையாக எகிப்து நாட்டில் ரிலீசாகும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் பெற்றுள்ளது. இப்படம் வரும் அக்.30ம் தேதி எகிப்து நாட்டில் ரிலீசாகிறது.