சல்மான் கானின் ‘பிக் பாஸ் 13’-ல் பங்கேற்ற தளபதி விஜய் பட நடிகை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 13’ நிகழ்ச்சியில் தளபதி விஜய் படத்தில் நடித்த நடிகை பங்கேற்றுள்ளார்.

Thalapathy Vijays actress Ameesha Patel Salman Khan Bigg Boss 13

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சல்மான் கான் 10வது முறையாக தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ் சீசன் 13’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை கடந்த செப்.29ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சியில் சல்மான் கான் அறிமுகம் செய்து வைத்தார்.

அதில், கடந்த 2003ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘புதிய கீதை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அமீஷா பட்டேல். மேலும், பாலிவுட்டில் ஹிட்டான ‘கஹோனா பியார் ஹை’, ‘ரேஸ் 2’, ‘கதார்: ஏக் பிரேம் கதா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அமீஷா பட்டேல், இந்த பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவில்லை, ‘மால்கின்’ என்றழைக்கப்படும் பிக் பாஸ் வீட்டின் ஓனராக பொறுப்பேற்றுள்ளார். சீக்ரெட் அறையில் அமர்ந்து போட்டியாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொறுப்பு அமீஷா பட்டேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமீஷாவை போல், பாலிவுட் திரையுலக நட்சத்திரங்களும், சீரியல் நடிகர், நடிகைகளும் இந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.