தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீசுக்கான பக்கா பிளான் - பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பப்போது...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

Thalapathy Vijay, Vijay Sethupathi, Lokesh Kanagaraj Master Release plan in April

இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, விஜய் டிவி புகழ் தீனா, கௌரி கிஷன், மகேந்திரன் என ஒரு பெரும்  நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் தேதி புனித வெள்ளி , 13 ஆம் தேதி ஈஸ்டர், ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு ஆகிய விடுமுறை தினங்கள் அடுத்தடுத்து வருவதால் இந்த தேதிகளில் ஏதாவது ஒன்றில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்த படம் வருகிற 9 ஆம் தேதி வியாழனன்று வெளியானால், ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி, அதனைத் தொடர்ந்து  சனி, ஞாயிறு விடுமுறை, திங்கட் கிழமை ஈஸ்டர் , செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு என தொடர் விடுமுறையால் அந்த படத்துக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கூடுதல் பலமாக இருக்கும்.

Entertainment sub editor