''பிகில் அடிக்க ரெடியா"….! தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் டிவிட்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 15, 2019 03:12 PM
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் விஜய் கலந்துகொள்கிறார். அவர் என்ன பேசப் போகிறார் எனும் எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இந்நிலையில், இவ்விழாவை தொகுத்து வழங்க பிரபல டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்பிரமணியனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இந்த தகவலை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிகில் இசை வெளியீட்டு விழாவை தொகுப்பு வழங்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. சும்மா தெறியா மெர்சல் பண்ணிட்டோம். இப்போ அடுத்து பிகில் அடிக்க ரெடியா' என அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Thank you for the love shown to me for hosting #BigilAudioLaunchOnSunTv my people ❤️❤️❤️!
Summaa Theri-aaa Merasal Pannitom , #Ipo Adhuthu #Bigil Adikka Readyaaaaa 🥳🤩🔥😍😄🤙🏻!!! pic.twitter.com/fTIRklla6O
— Ramya Subramanian (@actorramya) September 15, 2019