‘என்னை வியக்க வைத்த தளபதியின் குறும்புத்தனம்’ - ‘தளபதி 63’ சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேராசிரியர் ஞானசம்பந்தன் பிரத்யேகமாக பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Thalapathy 63- Dr. Gnanasambandan shares Vijay's humorous behaviour with Behindwoods exclusively

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்துள்ள பேராசிரியர் முனைவர் ஞானசம்பதன், Behindwoods தளத்துக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசுகையில், ‘அமெரிக்கா செல்லவிருந்த நிலையில் தான் தளபதி 63-ல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் காட்சியே விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அவரது பரம ரசிகன் நான். ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் இயல்பாக எளிமையாக இருப்பார். அவருக்கே உரிய நக்கல், குறும்புத்தனம் அவரிடத்தில் இயல்பாகவே இருக்கிறது. அது என்னை மிகவும் வியக்க வைத்தது’.

அதேபோல், ‘நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், எனது குடும்பத்தினர் செட்டிற்கு வந்தபோது இயல்பாக பேசினார். கேமராவுக்கு முன் எப்படி நடிக்க வேண்டும் என்ற சில நுணுக்கங்களையும் கற்றுத் தந்தார்’ என கூறினார்.

மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.