www.garudabazaar.com

தல அஜித்தின் வலிமை படம் எப்போ ரிலீஸ்? தியேட்டர் உரிமையாளர் சொன்ன தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது.

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யா சென்றிருந்தது. அதில் தல அஜித் (Ajith Kumar) பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் சிங்கிள் பாடலையும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளன்ர்.

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

படம் பற்றிய அடுத்த அப்டேட்டான அடுத்த சிங்கிள், டிரெய்லர்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. 

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி மட்டும் இன்னும் முடிவாகாமல் உள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இதுவாக இருக்கலாம் என தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். வலிமை படத்தை தவிர்த்து மற்ற அனைத்து பெரிய படங்களின் திரையரங்க வெளியீட்டு தேதிகளும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் தனது டிவிட்டரில், வலிமை படத்தின் வெளியீட்டு தேதி ஜனவரி  13 ஆம் தேதியாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார். 

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajithkumar Valimai Movie Release update from Theatre Owner

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Valimai, Valimai Pongal, Yuvan Shankar Raja will find this news story useful.