Reliable Software
www.garudabazaar.com

"தல அஜித் நடிக்கும் வலிமை படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸா?".. ட்ரெண்டிங் தகவல். உண்மை என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

Thala Ajith team responds over Valimai movie is on OTT? trending

தல அஜித்தை வைத்து எச்.வினோத் இப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி அடைந்த பின்னர் இருவரும் இணைந்த மெகா புரோஜக்டாக வலிமை உருப்பெற்றது. போனி கபூரின் தயாரில் வலுவாக உருவான வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ஓராண்டுக்கும் மேலாக காத்திருந்த ரசிகர்கள் இடையில் வலிமை அப்டேட்டுகளை கேட்டு ட்ரெண்ட் ஆக்கினர். 

ஒரு கட்டத்தில் அஜித்தே தானும் தயாரிப்பாளரும் ஒருங்கிணைந்து வலிமை ரிலீஸ் தொடர்பாக தீர்மானிப்போம் என்றும் அதுவரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். போனி கபூரோ, அஜித்தின் பிறந்த நாளான மே -1ஆம் தேதி முதல் வலிமை படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

Tjala Ajith Kumar Valimai movie is on OTT? there is a trending

இந்த நிலையில் தான் தற்போது வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர, பலரும் இதனை மறுத்துவருகின்றனர். எனினும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது எனும் ஒரு தகவல் ட்ரெண்ட் ஆகிவருகிறது. ஆனால் தல அஜித்தின் தரப்பை தொடர்புகொண்ட நாம் கேட்டறிந்தபோது, “இதற்கு வாய்ப்பே இல்லை” என வலிமை படம் ஓடிடியில் வெளியாவது குறித்த தகவலை மறுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் படக்குழுவினர் தான் வலிமை ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்கும். அதுவரை நிச்சயம் ரசிகர்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். 

தற்போதைய காலக்கட்டத்தில் கொரோனா 2வது அலை பரவிவரும் நிலையில் திரையரங்கு ரிலீஸ்க்காக காத்திருந்த பல படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனதுடன், சில படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளன. எனவே வலிமை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆவதாக சிலர் கூறிவரும் தகவல் இப்போது ட்ரெண்ட்டிங்கில் இருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.  தமன்னா நடிப்பில் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் கூட ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: நவம்பர் ஸ்டோரி விமர்சனம் - November Story Tamil Review 

தொடர்புடைய இணைப்புகள்

Thala Ajith team responds over Valimai movie is on OTT? trending

People looking for online information on Ajith Kumar, வலிமை, ThalaAjith, Valimai, ValimaiUpdate will find this news story useful.