www.garudabazaar.com

"300 ரூவா போட்ருக்கேன்.. எனக்கு சாப்பிட இதான் வேணும்".. பிக்பாஸ் கிட்ட CUTE-ஆ கேட்ட ஆயிஷா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

Tamil BIGG Boss season 6 Ayesha want Cheese Burger

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில் வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனாவும் பங்கேற்றுள்ளார்.

Tamil BIGG Boss season 6 Ayesha want Cheese Burger

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.  இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார்.  இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

அதன்பிறகு கடந்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில் இருவகை அணிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு என்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் போட்டியாளர் ஆயிஷா, கேமரா முன் தோன்றி பிக்பாஸிடம் ஒரு வேணடுகோள் வைக்கிறார். "நான் வந்து 300 ரூவா போட்ருக்கேன். பர்கர்க்கு.. எனக்கு வந்து McDonald's Burger கொடுங்க.  வேற எந்த பர்கரும் பிடிக்காது. சின்ன பர்கரே போதும். எக்ஸ்டரா சீஸ் போட்டு கொடுங்க." என ஆயிஷா கேட்கும் வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Tamil BIGG Boss season 6 Ayesha want Cheese Burger

People looking for online information on Ayesha, Biggboss, BIGGBOSS TAMIL, McDonalds Burger will find this news story useful.