“சிம்புவுடன் நடித்த பெண்ணா ? அவருக்கு பிடித்த பெண்ணா?”- மருமகள் குறித்து டிஆர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் சிம்புவின் திருமணம் பற்றியும் அவருக்கு கிடைக்கவிருக்கும் மணப்பெண் குறித்தும் அவரது தந்தையும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

T Rajendhar opens up about Simbu's fiance and his wedding

டி.ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் டி.ராஜேந்தர், சிம்புவிற்கு அவரோடு நடித்த பெண்ணை விட அவருக்கு பிடித்த பெண்ணோடு திருமணம் நடக்கவே ஆசைப்படுகிறேன். சிம்புவுக்கு விரைவில் மணப்பெண் கிடைப்பார் என நம்புகிறேன் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி-யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது லண்டனில் இருக்கும் நடிகர் சிம்பு விரைவில் சென்னை திரும்புவார் என்றும், அதன் பின் ‘மாநாடு’ திரைப்படத்தின் பணிகளை துவக்குவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.