செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'என்ஜிகே' தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதனையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 'காப்பான்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இதனை 'இறுதிச்சுற்று' இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் 'சூரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தை சூர்யாவின் 2 டி எண்டர்டெயின் நிறுவனத்துடன் இணைந்து குனீத் மோங்கா தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, நிக்கேத் பொம்மி ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி சதீஷ்கரில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாம்.