www.garudabazaar.com

நான் தான்டா ஜட்ஜூ... வெளியான சூர்யா நடிக்கும் ET படத்தின் பக்கா மாஸ் கமர்ஷியலான டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: சூர்யா நடிப்பில் ET எதற்கும் துணிந்தவன் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Suriya Starring Etharkkum Thuninthavan Movie Trailer

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி, தென்காசி பகுதியில் நடைபெற்று வந்தது. 

படப்பிடிப்பு, பின் தயாரிப்பு பணிகள் முடிந்து இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Suriya Starring Etharkkum Thuninthavan Movie Trailer

பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது. 

முதலில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. பின் ET படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தின் போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

Suriya Starring Etharkkum Thuninthavan Movie Trailer

சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் படத்தின் டிரெய்லர் இன்று (02.03.2022) வெளியாகி உள்ளது.  மாஸ் ஆன சண்டைக்காட்சிகளும், காமெடி, ரொமாண்டிக் காட்சிகளின் தொகுப்பும் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. டிரெய்லரில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சுப்பு பஞ்சு ஆகியோர் தோன்றுகின்றனர். ஜனரஞ்சகமாக பஞ்ச் வசனங்களும், ஆக்சன் காட்சிகளும் இந்த டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

நான் தான்டா ஜட்ஜூ... வெளியான சூர்யா நடிக்கும் ET படத்தின் பக்கா மாஸ் கமர்ஷியலான டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Starring Etharkkum Thuninthavan Movie Trailer

People looking for online information on ET, ET Trailer, Etharkkum Thuninthavan, Pandi Raj, Priyanka Mohan, Sun pictures, Suriya will find this news story useful.