www.garudabazaar.com

எதற்கும் துணிந்தவன் எதுல Release? ஒட்டுமொத்த வதந்திகளுக்கும் ஒரே full Stop வைத்த இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: எதற்கும் துணிந்தவன் படத்தின் வெளியீடு பற்றிய வதந்திகளுக்கு இயக்குனர் பாண்டிராஜ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Suriya Starring ET movie Releasing on OTT or Theatre

BREAKING: 'BEAST' படத்தின் மிக முக்கிய உரிமையை கைப்பற்றிய இந்தியாவின் முன்னணி நிறுவனம்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி பகுதியில் நடைபெற்று வந்தது. ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் காரைக்குடி படப்பிடிப்பு நிறைவடைந்தது என இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றது. இந்த படத்தின் அனைத்து வசனங்களுடைய படப்பிடிப்பும் (26.09.2021)  முடிவடைந்தது. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (11.10.2021) அன்று முடிந்துவிட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் டிவிட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருந்தார்.

Suriya Starring ET movie Releasing on OTT or Theatre

இந்த படத்தின் முதல் லுக் வீடியோ  ஜூலை 22ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது. எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி, சஸ்பென்ஸாக இரசிகர்களை ஆச்சர்யப்படுத்த ஜூலை 23 மதியம் ஒரு மணிக்கு 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரும் வெளியாகியது. போஸ்டர்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் ஒரே நாளில் PAN INDIA படமாக வெளியாக உள்ளது.

முதலில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ET படம் OTT-யில் வெளியாகும் என தகவல்கள் பரவின. இதனை மறுத்து படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் டிவீட் செய்துள்ளார். அதில் ET படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Suriya Starring ET movie Releasing on OTT or Theatre

இந்த படம் சென்சாராகி உள்ளது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 150:38 (2:30:38) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட திருத்தப்பட்ட காட்சிகளின் விவரம் விரைவில் வெளியாகும்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.  சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

BREAKING: வலிமை-க்கு பின் அஜித்குமார் - H வினோத் இணையும் #AK61 படத்தின் ஷூட்டிங் எப்போ? வேற மாரி அப்டேட்!

Suriya Starring ET movie Releasing on OTT or Theatre

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Starring ET movie Releasing on OTT or Theatre

People looking for online information on இயக்குனர், எதற்கும் துணிந்தவன், பாண்டிராஜ், ET movie, OTT, Suriya, Theatre will find this news story useful.