www.garudabazaar.com

சூர்யா படத்துல வந்த மாதிரியே... நிஜமாகவே போதை வழக்கில் சிக்கிய சிங்கம்-2 டேனியின் கூட்டாளி!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் ஏற்கனவே சூர்யா திரைப்படங்களில் ஏதோ ஒரு காட்சிகள் மற்றும் கதை அமைப்புகளில் வந்துவிடுகின்றன. எனவேதான் அன்றே கணித்தார் சூர்யா என்கிற வகையான டெம்பிளேட் மீம்ஸ்கள் வைரலாகி வருவதைக் காணமுடிகிறது.

Suriya Singam2 Danny friend arrested in real drug case trending

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சீனர்கள் உருவாக்கிய பயோ வார் குறித்து சொல்லப்பட்டிருக்கும். ஒரு கொடிய நோய் ஊருக்குள் பரவுவது குறித்தும் அதில் காட்டப்பட்டிருக்கும்.

அண்மையில் கொரோனா வந்து அனைவரையும் பாடாய் படுத்தியது. சீனாவின் வுஹான் ஆராய்ச்சி கூடத்தில் இருந்து கொரோனா பரவத் தொடங்கியதாக இன்றுவரை ஆய்வுகள் சொல்லியிருக்கின்றன. இதனால் பலரும் அன்றே கணித்தார் சூர்யா என்கிற டெம்ப்ளேட்டுடன் இந்த திரைப்படத்தை குறிப்பிட்டு மீம்ஸ் போடுவது உண்டு.

அந்த வகையில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் திரைப் படம் தொடர்பான ஒரு முக்கிய சம்பவம் நடந்துள்ளது. சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, ரகுமான், ராதாரவி, விவேக், சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த சிங்கம் 2-ஆம் பாகத்தில் டேனி என்கிற வில்லனை நாம் மறக்க முடியாது. வெளிநாட்டிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து கடல் வழியாக கடத்தல் செய்யும் டேனியை சூர்யா தூத்துக்குடி துறைமுகத்தில் சென்று பிடிப்பார். கைதும் செய்வார்.

இந்த காட்சிகளில் டேனி என்கிற பெயரில் டேனி சபானி என்கிற நடிகர் நடித்திருப்பார். இவருடைய நண்பராக ஒருவர் வருவார். இவர்தான் தற்போது உண்மையிலேயே போதை வழக்கில் கைதாகி இருக்கிறார். ஆம், நைஜீரிய நடிகர் காக்விம் மெல்வின் என்பவர்தான் இந்த காட்சிகளில் டேனியின் நண்பராக வருவார்.

தற்போது பெங்களூருவில் வசித்து வரும் காக்விம் மெல்வின் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து பெங்களூரு நகரில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் காக்விம் மெல்வின் போதைப் பொருளுடன் சிக்கினார். அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், ஹாசிஸ் கஞ்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ8 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும்  ரொக்கப் பணம், செல்போன் ஆகியவற்றையும் மெல்வினிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

நடிகர் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்துவருகிறார். அண்மையில் சூர்யா-ஜோதிகா இணைந்து தயாரித்து வரும் திரைப்படங்கள் அடுத்தடுத்து அமேசான் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

அந்த வகையில் முதல் இந்த தயாரிப்பிலான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அரசியல் நையாண்டி காமெடி படமான இந்த படத்தில் ரம்யா பாண்டியன் நடித்துள்ளார். 

இதேபோல் சூர்யா ஜெய்பீம் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கிய இந்த திரைப்படம் 2021, நவம்பர் மாதம் அமேசான் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது. தவிர பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார்.

Also Read: அடக்கடவுளே.. "Action King-க்குள்ள இவ்ளோ Sentiment-ஆ?"..  நடிகர் அர்ஜூனின் வாழ்க்கையில் நடந்த கதை.. கலங்க வைக்கும் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Singam2 Danny friend arrested in real drug case trending

People looking for online information on 2D Entertainment, Danny, Singam 2, Singam 2 Danny, Singam Danny, Singam Dany, Suriya, Trending will find this news story useful.