www.garudabazaar.com

BREAKING: மீண்டும் OTT-யில் வெளியாகும் சூர்யாவின் புதிய திரைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிக்கும் 39வது படத்தின் முதல் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.  படத்தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

suriya movie releasing ott amazon prime again

'ஜெய்பீம்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார்.

suriya movie releasing ott amazon prime again

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகிறது.

suriya movie releasing ott amazon prime again

இந்த படத்தை 'கூட்டத்தில் ஒருத்தன்' படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல்  இயக்கி உள்ளார். இந்த படத்தில் சூர்யா உடன்  'கர்ணன்' ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் '2d என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டான் இசையமைக்கிறார்.

suriya movie releasing ott amazon prime again

இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலோடு  எதிர்பார்த்து இருந்தனர். தற்போது இந்த படத்தின் வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி இந்த படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் மாதம் வெளியாகிறது. 

suriya movie releasing ott amazon prime again

சூர்யா நடிப்பில் ஏற்கனவே 'சூரரைப்போற்று' அமேசான் பிரைமில் போன வருடம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

suriya movie releasing ott amazon prime again

People looking for online information on Jai Bhim, Suriya will find this news story useful.