www.garudabazaar.com

துணிவு படத்தில் வெறித்தனமான 360 டிகிரி சண்டைக்காட்சி.. மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Supreme Sundar Master about Thunivu 360 Degree Stunt Scene

Also Read | சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல'.. புகைப்படங்களுடன் வெளியான சூப்பர் அப்டேட்!

வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில் சில்லா சில்லா பாடலை வைசாக் எழுத அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். இரண்டாவது சிங்கிள்  காசேதான் கடவுளடா பாடலை வைசாக் எழுதி பாடியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை சண்டைப் பயிற்சி இயக்குனர் சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் அளித்துள்ளார். அதில், "துணிவு படத்தில் 360 டிகிரி ரிக் வைத்து 32 வினாடிக்கு ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. தற்போது ராம்ப் செய்து அந்த காட்சி 17 வினாடிகள் வரை வந்துள்ளது. 3-வது ஷாட்டில் அஜித் சரியாக டைமிங்கை பிடித்துவிட்டார். இருப்பினும் சக சண்டைக் கலைஞர்கள் செய்த தவறுகளால் 13வது டேக்கில் அந்த ஷாட் சரியாக வந்தது. அஜித் ரசிகர்களுக்கு இந்த காட்சி புதியதாக இருக்கும்" என்று சுப்ரீம் சுந்தர் கூறியுள்ளார்.

Also Read |மலையாள படத்திற்கு தமிழில் தலைப்பு.. மோகன்லால் - லிஜோ ஜோஸ் இணையும் படத்தின் TITLE LOOK!

துணிவு படத்தில் வெறித்தனமான 360 டிகிரி சண்டைக்காட்சி.. மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Supreme Sundar Master about Thunivu 360 Degree Stunt Scene

People looking for online information on Ajith Kumar, Supreme Sundar, Supreme Sundar Master, Thunivu, Thunivu 360 Degree Stunt Scene will find this news story useful.