சூப்பர் ஸ்டாருக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட மேடை - தர்பார் இசை வெளியீட்டு விழா அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தற்போது தொடங்கியுள்ளது.

Superstar Rajinikanth's Darbar Audio Launch grand event all set for Thalaivar Entry

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார்.

மேலும், யோகிபாபு, ஜட்டின் சர்னா, பிரதீப் கப்ரா, நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் ‘தர்பார்’ படத்திற்கு ரஜினியின் ‘தளபதி’(1991) பிறகு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இசை வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியானது.

‘தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (டிச.7) மாலை 5 மணிக்கு மேல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ‘தர்பார்’ திரைப்பட குழுவினரும், திரையுலக முக்கிய பிரபலங்களும் தர்பார் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வருகின்றனர். இவ்விழாவை கண்டு மகிழ தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோடிக்கணக்கான ரசிகர்கள் சென்னையில் குவிந்துள்ளனர்.