Major Ajay Krishna-வாக நடிக்கும் இந்த Superstar - வெளியான Charecter Details இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு. அன்மையில் இவர் நடிப்பில் வெளியான 'மஹார்ஷி' திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெறறது.

Superstar Mahesh Babu plays Major in Sarileru Neekevvaru

இந்த படத்தில் அவருடன் இணைந்து அல்லரி நரேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதனையடுத்து அவர் 'சரிலேரு நீக்கெவரு' என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை எஃப் 2 என்ற படத்தை இயக்கிய அனில் ரவிபுடி இயக்குகிறார். ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் விஜய சாந்தி, ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய சாந்தி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் குறித்து இயக்குநர் அனில் ரவிபுடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மேஜர் அஜய் கிருஷ்ணாவாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கியுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.