'லாக்கப்' பட சாட்லைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் வைபவ் இணைந்து நடித்து உருவாகியிருக்கும் படம் 'லாக்கப்'. இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீஸரில் கௌதம் மேனன் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

Sun TV has acquired the satellite rights of Venkat Prabhu , Vaibhav's Lock Up

இந்த படத்தை பிரபல நடிகர் நிதின் சத்யா தனது ஸ்வேத் புரொடக்ஷன் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் வைபவிற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். இந்த படத்தை எஸ்ஜி சார்லஸ் கதை எழுதி இயக்கியுள்ளார்.

சந்தானம் சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அரோல் குரோலி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதனை சன் டிவி தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ளது.