Breaking: Bigg Boss பிரபலத்துடன் யோகி பாபு நடித்து வரும் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 31, 2019 05:14 PM
யோகி பாபு, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜாம்பி'. இந்த படத்தை எஸ்3 பிக்சர்ஸ் தயாரிக்க, புவன் நல்லன் இயக்குகிறார். இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் கோபி, சுதாகர், T.M.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பல சமூக வலைத்தள சென்சேஷன் பிரபலங்கள் நடிக்கின்றனர்.
சென்னை-புதுச்சேரி இடையே ஈ.சி.ஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இசை, டிரைலர், ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
Tags : Zombie, Yogi Babu, Yaashika Aanand