'பிரபல இயக்குநர் கவலைக்கிடம்...!' - படப்பிடிப்பில் விபரீதம்.. ICU-வில் அனுமதி! - நடிகர் சொன்ன தகவல்!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல இயக்குநர் நாரனிபுழா ஷாநவாஸ் மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
மலையாள சினிமாவில் தனது திரைப்படங்களால் கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் நாரனிபுழா ஷாநவாஸ். இந்த ஆண்டு இவர் அதிதி ராவ் ஹைதாரி, ஜெயசூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சுஃபியும் சுஜாதாவும் என்ற திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் லாக்டவுன் காரணமாக அமேசானில் வெளியாகி, ரசிகர்களையும் ஈர்த்தது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் நாரனிபுழா ஷாநவாஸ் கவலைக்கிடமாக உள்ளார் என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது அடுத்தப்படத்திற்கான வேலையில் அவர் இருந்தபோது, இருதயத்தில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமாகிவிட்டதாகவும், மூளைச் சாவு அடைந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்த நிலையில், சுஃபியும் சுஜாதாவும் பட தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் பாபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில், '' ஷாநவாஸ் வெண்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார். அவரது இதயம் இன்னும் துடித்துக் கொண்டிருக்கிறது. அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அற்புதம் நடக்கும் என நம்புவோம்'' என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Aditi Rao Hydari And Jayasurya’s Sufiyum Sujathayum Director Naranipuzha Shanavas Is Critical And On Ventilator Support
- Dhanush Releases Trailer Of Aditi Rao Hydari's Sufiyum Sujatayum Ft Jayasurya
- Sufiyum Sujatayum To Stream On Prime From July 3 Onwards
- Vijay Babu's Latest Statement Against Piracy
- Case Registered Against Actor/producer Vijay Babu