www.garudabazaar.com
iTechUS

மகேஷ் பாபு நடிக்கும் 'SSMB28'.. மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்ட OTT உரிமம்.. இத்தனை கோடி ரூபாயா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் ssmb28 படத்தின் ஓடிடி உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

SSMB28 Gets An Astonishing Deal From Netflix For Digital Rights

                          Images are subject to © copyright to their respective owners.

Also Read | குழந்தை பிறப்புக்கு அட்லி & பிரியாவை வாழ்த்திய கீர்த்தி & சமந்தா.. என்ன சொல்லிருக்காங்க 😍

சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின்  கூட்டணியில் #ssmb28 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்துக்கான அறிவிப்பு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது.

மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். வித்தியாசமான கான்செப்டுடன் கூடிய உயர்-ஆக்டேன் ஆக்‌ஷன் என்டர்டெய்னராக இருக்கும் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஆர்.கே. சுரேஷூம் இணைந்துள்ளார். ஆர்.கே. சுரேஷ் தாரை தப்பட்டை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். மருது படத்தில் 'ரோலக்ஸ் பாண்டியன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். 

SSMB28 Gets An Astonishing Deal From Netflix For Digital Rights

Images are subject to © copyright to their respective owners.

டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணா (சீனா பாபு) இப்படத்தை தயாரிக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது‌.

SSMB28 Gets An Astonishing Deal From Netflix For Digital Rights

Images are subject to © copyright to their respective owners.

நவின் நூலி எடிட்டராகவும், கலை இயக்குனராக ஏஎஸ் பிரகாஷூம், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக எஸ் தமன் மற்றும் ஒளிப்பதிவாளராக பிஎஸ் வினோத் ஆகியோரும் படத்தில் பணிபுரிகின்றனர்.

SSMB28 Gets An Astonishing Deal From Netflix For Digital Rights

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 81 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் ரிலீசான பிறகு 50 நாள் கழித்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | 14 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா.. தளபதி 67 படக்குழு வெளியிட்ட தெறி வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

SSMB28 Gets An Astonishing Deal From Netflix For Digital Rights

People looking for online information on Mahesh Babu, SSMB28, Superstar Mahesh Babu will find this news story useful.