''பிகில்' அண்ணனுக்கு நான் தம்பி' - பிரபல நடிகர் பஞ்ச்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

Soundara Raja shares experience with Actor Vijay in Bigil

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான வெறித்தனம், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட பாடல்கள் இந்த படத்துக்கு பெரும்பலமாக அமைந்தது. ஜி.கே.விஷ்ணு இந்த ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்தது.

இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். குறிப்பாக இந்த படத்தில் குணா என்ற போலீஸாக சில காட்சிகளே வந்தாலும் சௌந்தரராஜாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பிகில்' படத்தில் அவர் இடம் பெற்ற காட்சியை பதிவிட்டு, 'என் பேரு குணா 'பிகில்' அண்ணனுக்கு கூடப் பொறக்காத தம்பி. மறக்க முடியாத அனுபவம் படம் பிகில்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor