www.garudabazaar.com

ரியல் பொம்மியின் பேக்கரி பெயர் இதுதான்... அவரே வெளியிட்ட புகைப்படம்... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவு அளித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மரண மாஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் குஷியில் உள்ளனர். விமர்சகர்களும் படத்தை பாராட்டி எழுதி வருகின்றனர்.

soorarao pottru real bommi bakery nameரியல் பொம்மியின் பேக்கரி பெயர்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் நெடுமாறனுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு பொம்மிக்கும்  ரசிகர்கள் இருக்கின்றனர். கிராமத்திலிருந்து வந்த ஒரு பெண் எப்படி தனது பேக்கரியை இந்திய அளவில் உயர்த்துகிறார் என்று அவரது கதாபாத்திரம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. பலரும் தங்களுக்கு பொம்மி போன்ற மனைவிதான் வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகளை பதிவிட்டு வருவதையும் காண முடிகிறது.

இந்நிலையில் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் தன் மனைவியின் பேக்கரி பெயர் மற்றும் புகைப்படத்தை தற்போது தனது டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். காரணம் அந்த பேக்கரியை ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். 'பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி' என்ற பெயரில் தான் அவர் பேக்கரி நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

soorarao pottru real bommi bakery nameரியல் பொம்மியின் பேக்கரி பெயர்

People looking for online information on Soorarai Pottru will find this news story useful.