சாலமன் பாப்பையா தலைமையில் மினி Whatsapp பட்டிமன்றம் – தீர்ப்பு தான் ஹைலைட்!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னையில் நடைபெற்ற Behindwoods Gold Medals 2019 விருது விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று ஏராளமான திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இதில் Icon of Inspiration - Tamil Literature and Debate விருது சாலமன் பாப்பையாவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதையும் பதக்கத்தையும் அவருக்கு ஹிப்-ஹாப் ஆதி வழங்கி கெளரவித்தார்.
சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றமும் தமிழும் 90ஸ் கிட்ஸால் மறக்கவே முடியாத ஒன்று. ’அன்புத் தாய்மார்களே, அருமைப் பெரியோர்களே...’ என்று கேட்டாலே அந்த நாள் விசேஷம் நிறைந்ததாக மாறிவிரும். நகைச்சுவை கலந்த ரசமான விவாதங்களில் இரு தரப்பிற்கும் நோகாமலும், தமிழ் அழகுடனும் இவர் வழங்கும் தீர்ப்பு அந்நிகழ்ச்சியின் மவுசை கூட்டியது.
தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல் ’பாயிஸ்’, ’சிவாஜி’ ஆகிய திரைப்படங்களிலும் முகம் காட்டியிருக்கிறார் சாலமன் பாப்பையா. விருது பெற்ற அவருக்கு ஹிப் ஹாப் ஆதி மேடையிலேயே ஒரு ராப் பாடல் பாடி பாராட்டு தெரிவித்தார்.
மேலும், முத்தாய்ப்பாக பாரதி பாஸ்கர், பட்டிமன்றம் ராஜா இருவரையும் மேடைக்கு அழைத்து சுடச்சுட ஒரு சிறிய விவாதம் நிகழ்த்தப்பட்டது. இந்த பட்டாசான விவாதத்தை, சாலமன் பாப்பையா தன் தீர்ப்போடு அழகுற முடித்ததைக் காண கீழ்க்காணும் காணொலியை சொடுக்கவும்.
சாலமன் பாப்பையா தலைமையில் மினி WHATSAPP பட்டிமன்றம் – தீர்ப்பு தான் ஹைலைட்! வீடியோ