மாஃபியா பிரசன்னா பற்றி சினேகா எமோஷனல் - "நீ இல்லன்னா.." பிரசன்னா கொடுத்த ரிப்ளை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாஃபியா படத்தில் பிரசன்னாவின் நடிப்பை பார்த்து அவரது மனைவி சினேகா சிலாகித்து பதிவிட்ட கருத்துக்கு பிரசன்னா ரிப்ளை செய்துள்ளார்.

மாஃபியா பிரசன்னா குறித்து சினேகா கருத்து | sneha emotional post for mafia prasanna role

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது வெளியான திரைப்படம் மாஃபியா. அருண்விஜய் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்தார். இத்திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா வில்லனாக நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான இத்திரைப்படத்தில், பிரசன்னா நடிப்புக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகையும் பிரசன்னாவின் மனைவியுமான சினேகா, பிரசன்னாவின் நடிப்பை பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது பதிவில், 'எப்போதும் உங்கள் வேலையை கண்டு பெருமைபடுவேன். ஆனால் இந்த திவாகர் குமரன் அதிக தாக்கத்தை கொடுத்திருக்கிறது. செம ஸ்டைலிஷ். செம பர்ஃபெக்ட். இதற்காக அங்கீகாரம் உங்களுக்கு கிடைப்பதை பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. மாஃபியா டீமுக்கு வாழ்த்துக்கள்' என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு ரிப்ளை அடித்த பிரசன்னா, 'ரொம்ப நன்றி கன்னம்மா, நீ இல்லாமல் நானில்லை, உன்னுடைய சப்போர்ட் இல்லை என்றால் என்னால் பெஸ்டை கொடுக்க முடியாது' என அவர் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor