NKP Other Banner USA

சன் பிக்சர்ஸுடன் சிவகார்த்திகேயன் இணையும் படத்தின் மாஸ் அப்டேட் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘SK16' திரைப்படத்தின் First Look குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan’s SK16 first look will be out on August 12

சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK16 திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், அவருக்கு ஜோடியாக ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி (எ) நட்ராஜ் நடிக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. தற்போது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த SK16 திரைப்படத்தின் First Look போஸ்டர் வரும் ஆக.12ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.