Annatha Others ua
www.garudabazaar.com

ஸ்டார்ட் மியூசிக்! சிவகார்த்திகேயனின் "டான்".. தேதி & நேரத்துடன் வெளியான ‘சூர மாஸ்’ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் படம் தியேட்டரில் வெளியானது.

Sivakarthikeyan Don movie firstlook announcement

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.  S.J.சூர்யா, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட், சிவாங்கி நடிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, டாக்டர் பட ஹிரோயின் பிரியங்கா மோகன் மீண்டும் சிவாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற 'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. தொடர்ந்து கொரோனா காரணமாக தடைபட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் சமீபத்தில் துவங்கி நடைப்பெற்றது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிப்பதாகக் கூறப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. பின்னர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

முன்னதாக S.J.சூர்யா, சூரி ஆகியோர் ஏற்கனவே இப்படத்துக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் டப்பிங் பேசியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், “அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசி முடிக்கப்பட்டுள்ளது” என ட்வீட் செய்துள்ளார்.

குறிப்பாக, டான் படம் தன் கல்லூரி வாழக்கையை நினைவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே இப்படத்தின் ஃபரஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Don movie firstlook announcement

People looking for online information on Anirudh Ravichander, Lyca Productions, Sivaangi, Sivakarthikeyan will find this news story useful.