Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"வந்தாச்சு டாக்டர் ரிலீஸ் அறிவிப்பு".. கொண்டாட தயாராகும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் டாக்டர்.

Sivakarthikeyan Doctor release announced டாக்டர் சிவகார்த்திகேயன்

கோலமாவு கோகிலா எனும் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் டாக்டர். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் SK புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமான பிரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி யூடியூபில் 100 மில்லியன் அதாவது 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை பெற்றிருந்தது. இது குறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது அனிருத்திடம் இருந்து மற்றுமொரு செஞ்சுரி என்று தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ALSO READ: லோகேஷ் - கமல் இணையும் விக்ரம் பட டீசர்.. வெளியான இரட்டிப்பு மகிழ்ச்சி செய்தி!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Doctor release announced டாக்டர் சிவகார்த்திகேயன்

People looking for online information on Anirudh Ravichander, ‎KJR Studios, Doctor, Priyanka Mohan, Sivakarthikeyan, Sivakarthikeyan Productions will find this news story useful.