VIDEO: "அரசியல் வசனம்" - கலகலப்பாக உதயநிதியிடம் சிவகார்த்திகேயன் சொன்ன சம்பவம்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டான்’ திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும்,திரையரங்குகளில் வெளியிட தயாராக உள்ளது.

Sivakarthikeyan Clarification about Political dialogues in DON

இப்படத்தை LYCA PRODUCTIONS சுபாஸ்கரன் மற்றும்  SIVAKARTHIKEYAN PRODUCTIONS இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பல  பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் Red Giant Movies சார்பில் உதயநிதி ஸ்டாலின் படத்தை வெளியிடுகிறார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் முன் வெளியீட்டு விழா ஜேப்பியர் பொறியியல் கல்லூரியில் கல்லூரி மாணவர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் நடைபெற்றது.

Sivakarthikeyan Clarification about Political dialogues in DON

நடிகை பிரியங்கா அருள் மோகன் கூறியதாவது... இந்த படத்தில் பணிபுரிந்ததன் மூலம் எனக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு அழகான நட்பு வட்டாரம் கிடைத்தது. என் கல்லூரி நாட்களை மீண்டும் ஒருமுறை பார்ப்பது போல் இருந்தது. இந்த படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்ததற்கு SK  Productions மற்றும் Lyca Productions நிறுவனங்களுக்கு நன்றி.

சமுத்திரக்கனி சார் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சாருடன் பணிபுரிந்தது,  சிறந்த  அனுபவமாக இருந்தது. அனிருத்தின் ஹிட் ஆல்பத்திற்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான நடனத்தை படத்தில் அமைத்த ஷோபி மாஸ்டருக்கும், லலிதா மாஸ்டருக்கும் நன்றி. நான் இண்டஸ்ட்ரியில் சுமூகமாக பயணிக்கும்படி, இங்குள்ள ரசிகர்கள் அளித்த  அன்புக்கும் ஆதரவிற்கும்  நன்றி. டான் திரைப்படம் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பார்க்க வேண்டிய ஒரு வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். 

Sivakarthikeyan Clarification about Political dialogues in DON

நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது...இந்த படத்தில் நாங்கள் பணியாற்றத் தொடங்கியபோது, Lyca Productions டேபிள் லாபத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம், அதை நாங்கள் வெற்றிகரமாகச் செய்துள்ளோம். சிபி, டான் படத்தின் ஸ்கிரிப்டை கூறியபோது, அது மிகவும் மகிழ்ச்சியாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தது. கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனையும் பிரதிபலிக்கும் கதை இது, அதை சிபி மிக அழகாக வடிவமைத்துள்ளார். அனைவரும் இத்திரைப்படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

டான் படம் நல்ல வெற்றியடைந்தால், என்னைப் போன்றவர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். நான் மிகவும் ரசித்தவர்களைக் கொண்ட ஒரு குழுவைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலி. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி சார் உடைய கதாபாத்திரம் உணர்வுபூர்வமானதாக இருக்கும். எனது கல்லூரி கல்சுரல் நிகழ்ச்சிகளில் SJ சூர்யா சாரின் குரலில் மிமிக்ரி செய்ய தொடங்கி, அதன் மூலம் பிரபலமானேன். படப்பிடிப்பின் போது கூட இதை அவரிடம் சொன்னேன். படத்தில் எனக்கு அறிமுகப் பாடலும், கதாநாயகியுடன் ஒரு  பாடலும் இருப்பதால், நான் ஹீரோ இல்லை.  

இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு ஹீரோ மற்றும் அவர்களுக்கென்று ஒரு தனி சிறப்புகள் உண்டு.  இந்தப் படத்தில் பிரியங்கா சிறப்பாக நடித்துள்ளார். அவர் தமிழ் மொழியை நன்கு அறிந்தவர் என்பதால், இயக்குனருக்கு அவரை நடிக்க வைப்பது  எளிதாக இருந்தது, மேலும் அவரால் சிறந்த நடிப்பை வழங்க முடிந்தது. பாலா, ராஜு, ஷாரிக், ஷிவாங்கி, விஜய் மற்றும் பலர் படத்தில் அசத்தியுள்ளனர். அவர்களுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் எனது கல்லூரிக்கு திரும்புவது போல் இருந்தது. சிவாங்கி இந்தப் படத்தில் அழகான நடிப்பை வழங்கி இருக்கிறார். விலங்கு வெப் தொடரில் பால சரவணனின் நடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியது. தொழில்நுட்பக் குழு இந்த படத்திற்கு ஒரு பெரிய தூணாக இருந்திருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகளை அனிருத் செய்துகொண்டிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு அவரால் வரமுடியவில்லை. அவர் கடந்த ஒரு மாதமாக தனது படங்களுக்காக இரவும் பகலும் தூங்காமல் உழைத்து வருகிறார். எனது படங்களுக்கு அவர் அளித்த ஆதரவு அளப்பரியது. தொற்றுநோயை எதிர்கொள்வதே எங்கள் ஒட்டுமொத்த குழுவினருக்கும் பெரிய சவாலாக இருந்தது.  ஏறக்குறைய அனைத்து காட்சிகளும் கல்லூரி கூட்டத்தை உள்ளடக்கியது, மேலும் முழு குழுவினரின் ஒத்துழைப்புடன் மட்டுமே, இந்த காட்சிகளை எந்த தடையும் இல்லாமல் எங்களால் படமாக்க முடிந்தது. இன்று தனது பெற்றோரை பெருமைப்படுத்திய சிபியை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

Sivakarthikeyan Clarification about Political dialogues in DON

அவர் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், மீதமுள்ளவற்றை பார்வையாளர்கள் கவனித்துக்கொள்வார்கள். ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் சார் எங்கள் படத்தை வெளியிடுகிறார், அவர் மூலம் டான் படம் ஒரு பெரிய வெளியீட்டைக் காணப் போகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ட்ரெய்லரை கட் செய்யும் போது உங்களுடன் அமர்ந்து பார்ப்பேன் என நினைக்கவில்லை சார். இதுக்கு எல்லாம் இயக்குனர் தான் காரணம். டான்  படத்தில் கனவுகளும் லட்சியங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது, எனது குழந்தைப் பருவத்தை மறுபரிசீலனை செய்வது போல் இருந்தது. படம் முடிந்து திரையரங்குகளை விட்டு வெளியில் செல்லும் பார்வையாளர்களுக்கு படம் சில தாக்கத்தை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாக நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எனது ரசிகர்களுக்கு நன்றி.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.

https://www.behindwoods.com/bgm8/

VIDEO: "அரசியல் வசனம்" - கலகலப்பாக உதயநிதியிடம் சிவகார்த்திகேயன் சொன்ன சம்பவம்! முழு தகவல் வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Clarification about Political dialogues in DON

People looking for online information on Don, Sivakarthikeyan, SK, Udhayanidhi Stalin will find this news story useful.