www.garudabazaar.com

சிவகார்த்திகேயனின் பிரபல படம்.. திடீர் டாப் ட்ரெண்டிங்கில்.. அவ்ளோ எதிர்பார்ப்பு இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வெற்றி பெற்ற 'இன்று நேற்று நாளை' எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம்.

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

காமெடி, அதே சமயம் வலுவான திரைக்கதை என இந்த திரைப்படம் ஹிட் அடித்ததை தொடர்ந்து இப்படத்தின் 2-ஆம் பாகமும் இயக்குநர் ரவிகுமாரின் எழுத்தில் தயாராகி வருகிறது. S.P.கார்த்தி இப்படத்தை இயக்குகிறார்.

அயலான் படம்

இதனிடையே  சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கி வந்த திரைப்படம் அயலான்.  நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்  முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன், யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

அயலான் படமும் இயக்குநர் ரவிகுமாரின் முந்தைய படத்தை போலவே ஏலியன்கள் மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் சார்ந்து உருவானதாக, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அறியப்பட்டது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அயலான் படத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த திரைப்படம் பற்றிய செய்தி வெளியானவுடனேயே ரசிகர்கள் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். முன்னதாக இப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் முடிவடைந்ததாக, இப்படத்தின் இயக்குநர் ரவிகுமார் நம்மிடையே பிரத்தியேகமாக தெரிவித்திருந்ததை குறிப்பிட்டிருந்தோம்.

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

டாப் ட்ரெண்டிங்கில் அயலான்

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் குரலில், இப்படத்தில் இருந்து ‘வேற லெவல் சகோ’ எனும் பாடல் வெளியாகி இளைஞர்களிடையே வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் தான் இப்படம் குறித்த செய்திகள் இப்போது தொடர்ச்சியாக இணையதளத்தில் வைரலாகி வருகின்றன, குறிப்பாக #Ayalaan என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

இதை பார்த்த பலரும் திடீரென சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் டாப் ட்ரெண்டிங்கில் வர காரணம் என்ன? என்பது குறித்து பேசி வருகின்றனர். இன்னும் சிலர் அயலான் திரைப்படம் ஒரு பொங்கல் வெளியீடாக வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர். எனினும் இப்படத்தின் ரிலீஸ் தேதி, விரைவில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தில் தற்போது நடித்துள்ளதைத் தொடர்ந்து இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் ஒரு தெலுங்கு-தமிழ் பைலிங்குவல் படத்தில் இணைகிறார். சிவகார்த்திகேயனின் 20வது படமாக அறியப்படும் இந்த படத்தினை அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions தயாரிக்கின்றன. இப்பட பணிகள், இந்த மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: 'உங்க யார் மனசுலயாவது இடம் புடிச்சிருந்தா'.. ராஜூவா இப்படி உருக்கமா பேசுறாரு! நெகிழும் #BiggBoss ரசிகர்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Ayalaan trending SK20 sudden trending viral

People looking for online information on 24 AM Studios, Ayalaan trending, Ayalaan trending twitter, Don, Ravi Kumar, Sivakarthikeyan, SK20 will find this news story useful.