SK14 : சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியின் சையின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தின் டைட்டில் இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் சையின்ஸ் ஃபிக்‌ஷன் படத்திற்கு அயலான்-என பெயரிடப்பட்டுள்ளது.

sivakarthikeyan arrahman ravikumar's sk14 title is ayalaan

இன்று நேற்று நாளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ரவிகுமார். டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இன்று நேற்று நாளை பல தரப்பில் இருந்து பாராட்டுக்களை குவித்ததோடு, ரசிகர்களையும் கவர்ந்தது. இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை ரவிக்குமார் டைரக்ட் செய்கிறார் என அறிவிக்கப்பட்டது. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார் எனவும் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் எனவும் அறிவிப்பு வெளியாகியது. ரவிகுமாரின் முந்தைய படத்தை போல, இத்திரைப்படமும் சையின்ஸ் ஃபிக்‌ஷன் கதையை மையமாக வைத்து உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அயலான் என பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் டைட்டில் லுக்கை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, படக்குழு டைட்டிலை வெளியிட்டிருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

Entertainment sub editor