Valimai BWE
www.garudabazaar.com

DON: போடு வெடிய!.. டான் படத்தின் சாட்டிலைட் TV உரிமத்தை கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: டான் படத்தின் TV ஒளிபரப்பு சேட்டிலைட் உரிமத்தை முன்னணி தமிழ் சேனல் கைப்பற்றி உள்ளது.

Siva karthikeyan DON Satellite rights Bagged by Kalaignar TV

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் S.J.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள்  ‘டான்’ படத்தில்  இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் டான் படத்திற்கு இசையமைக்கிறார். டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  கடந்த ஆண்டு (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டிவிட்டரில் அறிவித்தது.

Siva karthikeyan DON Satellite rights Bagged by Kalaignar TV

சிவகார்த்திகேயனின் டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.  இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

Siva karthikeyan DON Satellite rights Bagged by Kalaignar TV

இந்நிலையில் இந்த DON படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

டான் படத்தில் கே.எம்.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டுனெ ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J - AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Siva karthikeyan DON Satellite rights Bagged by Kalaignar TV

People looking for online information on Don, Lyca, Priyanka Mohan, Satellite TV Rights, Sivakarthikeyan, SK will find this news story useful.